Asianet News TamilAsianet News Tamil

Chennai Flood: சென்னை எம்ஜிஆர் நகரில் திடீர் பள்ளம்.. சிக்கிய டெம்போ வேன்..!

 தி.நகர் மேட்லி சுரங்கப்பாதையில் மட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் மழை நீர் அகற்றியவுடன் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். பல்வேறு இடங்களில் விழுந்து கிடந்த 116 மரங்களும் அகற்றப்பட்டுள்ளது. மேலும் தொடர் மழையின் காரணமாக சாலைகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த பள்ளத்தை மூடுபனியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

Heavy Rain...tempo van stuck in a ditch in chennai
Author
Chennai, First Published Nov 10, 2021, 8:40 PM IST

சென்னை நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் வரையிலான சாலையின் கீழே அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 7ம் தேதி இரவு பெய்த கனமழையின் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களான தி.நகர், நெசப்பாக்கம், மேற்குமாம்பலம், சைதாப்பேட்டை, ஜாபர்கான்பேட்டை, ராயபுரம், கொளத்தூர், வேளச்சேரி, தரமணி போன்ற பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது. இதையடுத்து மழைநீரை அகற்றும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்கிய 400 இடங்களில் 240 இடங்களிலும், 14 சுரங்கப் பாதைகளில் மழை நீர் முழுவதுமாக அகற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. 

Heavy Rain...tempo van stuck in a ditch in chennai

 தி.நகர் மேட்லி சுரங்கப்பாதையில் மட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் மழை நீர் அகற்றியவுடன் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். பல்வேறு இடங்களில் விழுந்து கிடந்த 116 மரங்களும் அகற்றப்பட்டுள்ளது. மேலும் தொடர் மழையின் காரணமாக சாலைகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த பள்ளத்தை மூடுபனியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

Heavy Rain...tempo van stuck in a ditch in chennai

இந்நிலையில் இன்று காலை நெசப்பாக்கம் பகுதியில் சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் போது திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் சென்ற வாகனம் ஒன்று பள்ளத்தில் மாட்டிக்கொண்டது. பின்னர் மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Heavy Rain...tempo van stuck in a ditch in chennai

இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் கிரேன் மூலம் வாகனத்தை மீட்டனர். மேலும் பள்ளம் ஏற்பட்ட  இடத்தில் சிமெண்ட் கலவையை கொண்டு மூடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அதன்பிறகு அப்பகுதியில் வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios