Asianet News TamilAsianet News Tamil

Chennai Rain: சென்னையில் காலை முதல் வெளுத்து வாங்கும் கனமழை.. இந்த மாவட்டங்களில் அடித்து ஊற்றப்போகுதாம்..!

வட கிழக்கு பருவமழை தமிழகத்தில் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதால், தெற்கு வங்கக் கடல் பகுதியில் தற்போது நிலை கொண்டுள்ள வளி மண்டல காற்று சுழற்சி இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும்.

Heavy rain in various parts of Chennai from morning
Author
Chennai, First Published Nov 25, 2021, 7:30 AM IST

காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக இன்று காலை முதல் சென்னையில் நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, ராமபுரம், போரூர் பட்டினப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.  

வட கிழக்கு பருவமழை தமிழகத்தில் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதால், தெற்கு வங்கக் கடல் பகுதியில் தற்போது நிலை கொண்டுள்ள வளி மண்டல காற்று சுழற்சி இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும். இது மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோரப் பகுதிக்கு வர உள்ளது. இதையடுத்து, ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் நேற்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்தது. மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்தது. 

Heavy rain in various parts of Chennai from morning

அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இதுதவிர திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள், ஆகியவற்றில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். பிற தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். இந்த மழை மேலும் நீடித்து 27ம் தேதி கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும்  கனமழை மற்றும் மிக கனமழையாக பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. 

Heavy rain in various parts of Chennai from morning

இந்நிலையில், இன்று காலை முதல் சென்னையில் நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, ராமபுரம், போரூர் பட்டினப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதேபோல், புறநகர் பகுதியான தாம்பரம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, பல்லாவரம், மாங்காடு, பெங்ககளத்தூர் உள்ளிட்ட  சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் தற்போதே வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டுகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும்,சென்னையில் உள்ள 11 சுரங்பாதையில் சிறிதளவு நீர் தேங்கியுள்ளது.  

Follow Us:
Download App:
  • android
  • ios