சென்னையில் அதிகாலை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கான வாய்ப்பு உள்ளது என வாலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்வதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து. இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விடிய விடிய கனமழை பெய்தது. 

சென்னையில்  கிண்டி, சைதாப்பேட்டை, மயிலாப்பூர், மடிப்பாக்கம், ஆலந்தூர், நங்கநல்லூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அயனாவரம், ராமாபுரம், பூவிருந்தவல்லி உள்ளிட்ட இடங்களில் இரவு நேரத்திலும் மழை கொட்டியது. இன்று காலையும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.


தமிழகம் மற்றும் புதுவையில் வளிமண்டல மேல் அடுக்கில் நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக பெரும்பான்மையான மாவட்டங்களில் மிதமான மழைக்கும், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கான வாய்ப்பு உள்ளது’’ என அவர் தெரிவித்துள்ளார்.