கடந்த சில நாட்களாக தமிகத்தில் மழை ஓய்ந்திருந்த நிலையில் தென்மேற்கு பருவ மழை நிறைவடைந்துள்ளது. நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதனால் தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.

இந்நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் கனமழை பெய்ய இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தென்மேற்கு வங்கக் கடல், தென் தமிழகத்தை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த  5 நாட்களுக்கு பரவலாக கனமழை நீடிக்கும். இதேபோல் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.