தமிழகத்தின் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இது இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. இந்த நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வெப்ப சலனம் மற்றும் வடதமிழகத்தின் வளி மண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.தமிழகத்தில் கடலூர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, அரியலூர், ராமநாதபுரம் உட்பட 15 மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்யலாம்.

சென்னையை பொறுத்த வரையிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரியலூர் மாவட்டம் திருவிடைமருதூரில் 15 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.

இவ்வாறு வானிலை மையம் சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.