தமிழகத்தில் மேலும் 69  பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார். 

இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில்;- தமிழகத்தில் மேலும் 69  பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 69 பேரில் 63 பேர் டெல்லி சென்று வந்தவர்கள். கொரோனா பாதித்த 690 பேரில் 636 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்.

தமிழ்நாட்டில் சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் 64 வயது பெண் கொரோனாவால் இன்று உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.  இன்று மட்டும் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வீட்டுக்கண்காணிப்பில்  66,431 இருந்து வருகின்றனர்.

கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.