தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1204ஆக உயர்ந்துள்ளது என  சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டியளிக்கையில்;- தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1204ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 21 பேருக்கு நேரடி பாதிப்பு, ஒருவர் வெளிநாட்டிற்குச் சென்று வந்தவர். எஞ்சிய 9 பேரும் வெளிநாட்டுக்குச் சென்றவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள். இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 81 பேர் குணமடைந்துள்ளனர். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.  

தமிழகத்தில் 28,709 பேர் வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அரசுக் கண்காணிப்பில் 135 பேரும் உள்ளனர். 28 நாட்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் 68,519. இதுவரை 19,255 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இன்று திண்டுக்கலில் 9, சென்னையில் 5, தஞ்சையில் 4, ராமநாதபுரம், மதுரை, நாகை தலா 2 பேருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தமிழகத்தில் 16 அரசு ஆய்வகங்கள், 9 தனியார் ஆய்வகங்கள் என 25 ஆய்வகங்கள் உள்ளது என பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.