கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக சுகாதாரத்தறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்து வந்திருந்தார். இதனையடுத்து, அமைச்சரை ஓரம் கட்டிவிட்டு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் தெரிவித்து வந்த நிலையில்  திடீரென அவரும் மாற்றப்பட்டு நேற்று தலைமை செயலாளர் சண்முகம் பேட்டியளித்திருந்தர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகம் எடுத்து வருகிறது. கடந்த 4ம் தேதி 485ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை 6 நாட்களில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்திக்கையில் தமிழகத்தில் புதியதாக 77 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த 77 பேரில் வெளியில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் 5 பேர். ஏற்கனவே டெல்லி சென்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 72 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 911ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை  9 ஆக உயர்ந்துள்ளது.  44 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

கொரோனா தொற்றை தடுக்க கடுமையான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்துவதே நமது நோக்கம். முடிந்தவரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் புதிய கொரோனா தொற்று நபர்கள் வந்துவிடாத அளவிற்கு நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டு வருகிறோம் என்றார். 

இந்நிலையில், ஊரடங்கில் வீடுகளில் இருக்கும் மக்கள் சுகாதார செயலாளர் பீலா ராஜேஷின் தகவல்களுக்காக காத்திருந்து  அவரது ‘பிரஸ் மீட்’ செய்தியை கண்டு தகவல்களை தெரிந்து கொண்டு இருந்தனர். அதிலும் குறிப்பாக பெண்கள் பீலா ராஜேஷ் அணியும் சேலைகளுக்கு ரசிகைகளாக மாறி இருந்தனர். இதனால் பீலா ராஜேசின் சேலை பற்றிய மீம்ஸ்கள், தகவல்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியது. 

இந்நிலையில், நேற்று மாலை, வழக்கம் போல பிரஸ் மீட் செய்தி பார்க்க வந்த பெண்கள், அவரது ரசிகர்கள் பீல் பண்ணும் நிலைக்கு ஆளாகினர். பீலா ராஜேசுக்கு பதிலாக தலைமைச்செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பீலா ராஜேஷ் உடனிருந்தார். பேட்டியளிக்கையில் சண்முகம் மற்றும் பீலா ராஜேஷ் இருவருமே மாஸ்க் அணிந்திருந்தனர். இதன்மூலம் பீலா ராஜேஷ் இருட்டடிப்பு செய்யப்படுகிறாரா என பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.