கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு செல்பவர்கள் பலருக்கு இதய பிரச்சனை, பக்கவாதம்,  ரத்தம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்;- கொரோனா தொற்றியிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிவர்களை கண்காணிக்க தனியாக மையங்கள் உருவாக்கப்படும். கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு சென்று திரும்பியவர்கள், பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு உள்ளானது தெரிய வந்துள்ளது.  அவர்களுக்கு தீர்வு வழங்க ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் புதியதாக ஒரு மையம் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் 80 சதவீதம் பேர் எந்தவிதமான புகார்களையும் தெரிவிக்கவில்லை. பலருக்கு நிமோனியா, இதய பிரச்சனை, இரத்தம் கட்டுதல், பக்கவாதம் போன்ற உடல் பிரச்சனைகள் ஏற்படுவது தெரியவந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் குணமடைந்தவர்களை கண்காணிக்க மையங்கள் அமைக்க உள்ளதாக ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.