Asianet News TamilAsianet News Tamil

முதல்வருக்கு மூத்த பத்திரிகையாளர் வைத்த கோரிக்கை... சுகாதாரத்துறை அமைச்சர் கொடுத்த உடனடி தீர்வு...!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது. ஒரு வீட்டில் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதால் அவர்களுக்காக மருந்து வாங்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. 

Health minister given solution to senior media person request to CM
Author
Chennai, First Published May 11, 2021, 5:35 PM IST

கொரோனா நோயாளிகளுக்கு ‘ரெம்டெசிவிர்’ ஊசி மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து தனியார் மருத்துவமனைகளுக்கு சப்ளை இல்லை. அரசு மருந்து கழகம் மூலமே விற்கப்படுகிறது. முதலில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டுமே காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விற்பனை செய்யப்பட்டது. எனவே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மருந்து வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. எனவே மக்களின் சிரமங்களை குறைப்பதற்காக சேலம், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய நகரங்களிலும் மருந்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Health minister given solution to senior media person request to CM

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது. ஒரு வீட்டில் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதால் அவர்களுக்காக மருந்து வாங்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் அப்துல் முத்தலிப் என்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ட்விட்டர் மூலம் கோரிக்கை வைத்தார். அந்த பதிவில், ‘பெரு மதிப்பிற்குரிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ரெம்டெசிவருக்காக மக்கள் அலையும் நிலையில் சிலர்குடும்பமே பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள நிலையில் ரெம்டெசிவர் வாங்கக்கூட அட்டெண்டர் இல்லா நிலை உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்காக  உதவினால் நன்றாக இருக்கும். நன்றி” எனக் குறிப்பிட்டிருந்தார். 

இந்த ட்வீட்டிற்கு உடனடியாக பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அரசாங்க விற்பனை மையங்களில் ரெம்டெசிவர் மருந்தை வாங்க குடும்ப உறுப்பினர்கள் அல்லது அட்டன்டர்கள் இல்லாத நோயாளிகளுக்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் தங்களுடைய  ஊழியர்களை சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் அனுப்பி மருந்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios