முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Strict action will be taken against spreading rumors about MK Stalin's health: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். ''லேசான தலைச்சுற்றல் தொடர்பான அறிகுறிகளைக் கண்காணிப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு வேறு சில பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன. முதல்வர் மருத்துவமனையில் இருந்து பணிகளை கவனிப்பார்'' என்று அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்து இருந்தது.

முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு

பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ஸ்டாலின் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடியே பணிகளை கவனித்து வருகிறார். 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடந்து வரும் நிலையில், மருத்துவமனையில் இருந்தபடியே பயனாளிகளுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.

முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி

இப்படியாக மருத்துவமனையிலும் முதல்வர் சுறுசுறுப்பாக பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதை உண்மை என நம்பி ஒரு சிலர் அதை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் தவறான தகலை பரப்பினாலோ, அவற்றை சமூக் ஊடகங்களில் பகிர்ந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை

மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. , முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை தரப்பிலிருந்து கொடுக்கப்படும் அறிக்கையை தவிர மற்ற எந்த தகவல்களும் உண்மை நிலை இல்லை எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.