பள்ளி நேரத்தில் சீருடையுடன் தண்ணீர் கேனை சுமந்து செல்லும் மாணவ, மாணவிகள்; பெற்றோர் அதிர்ச்சி
சென்னை புது வண்ணாரப் பேட்டையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி சீருடையுடன் பள்ளிக்கு தண்ணீர் கேனை சுமந்து சென்றது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஆர் கே நகர் தொகுதி, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் இரண்டு மாணவர்கள் மற்றும் இரண்டு மாணவிகள் அருகில் உள்ள பகுதியில் இருந்து 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் கேனை தோளிலும், இடுப்பிலும் சுமந்து பள்ளிக்கு கொண்டு சென்றனர்.
பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்த தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த மாணவர்கள் படிக்கும் நேரத்தில் வெளியே சென்று தண்ணீர் கேனை கொண்டு வந்தது கடும் கண்டனத்தை எழுப்பி உள்ளது.
வகுப்பறையில் இருக்க வேண்டிய மாணவர்களை எதற்காக ஆசிரியர்கள் வெளியே அனுப்பினார்கள்? இந்த தண்ணீர் யாருக்காக கொண்டுவரப்பட்டது? ஆசிரியர்களுக்காகவா? அல்லது மாணவர்களுக்காகவா? என்று அப்பகுதியில் உள்ளவர்கள் கேள்வி எழுப்பினர்.
170 ஆடுகள் வெட்டப்பட்டு ஆண்களுக்கு மட்டும் கம கம கறி விருந்து; நாமக்கல்லில் விநோத திருவிழா
படிக்க வரும் மாணவர்களை இப்படி பள்ளி நிர்வாகம் வேலை வாங்குவது கண்டனத்துக்குரியது. என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.