சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் அத்துமீறிய மருத்துவர்; அதிகாரிகள் அதிரடி
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மருத்துவரை 2 வாரம் பணியிடை நீக்கம் செய்து மருத்துவ குழு உத்தரவிட்டுள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர், உடல் நலன் குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்தவர்கள் ஸ்கேன் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளனர். அதன் அடிப்படையில் அந்தப் பெண் ஸ்கேன் எடுப்பதற்கு ஸ்கேன் எடுக்கும் அறைக்கு சென்றுள்ளார்.
ஸ்கேன் எடுக்கும் பொழுது முதுநிலை மருத்துவம் படிக்கும் பயிற்சி மருத்துவர் கோகுல் என்பவர் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அப்பெண் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவ குழு, விசாரணை அடிப்படையில் மருத்துவர் கோகுலை 2 வாரங்களுக்கு இடை நீக்கம் செய்ய உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவின் பேரில் கோகுல் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம் பெண் தரப்பில் பாதிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மருத்துவர் கோகுலை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டு அவர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மருத்துவரால் நோயாளிகளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D