TN metro facility : பயணிகளுக்கு குட்நியூஸ்.. மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!
சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் மெட்ரோ மீது பொதுமக்களுக்கு அதிகம் நாட்டம் இல்லாத நிலையில் தற்போது நாளுக்கு நாள் இதில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மெட்ரோ ரயில் பயணிகளுக்குப் பல்வேறு வசதிகளை நிர்வாகம் மேம்படுத்தி வருகிறது.
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்குவது போல மெட்ரோ ரயிலிலும் பயணம் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் மெட்ரோ மீது பொதுமக்களுக்கு அதிகம் நாட்டம் இல்லாத நிலையில் தற்போது நாளுக்கு நாள் இதில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மெட்ரோ ரயில் பயணிகளுக்குப் பல்வேறு வசதிகளை நிர்வாகம் மேம்படுத்தி வருகிறது.
மெட்ரோ ரயில் நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கையால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பயணிகள் டிக்கெட் எடுப்பதற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்து நிற்காமல் செல்லும் வகையில் கியூஆர் கோடு, ஸ்மார்ட் கார்டு, டோக்கன் முறைகள் தற்போது நடைமுறையில் உள்ளன.
இந்நிலையில், பயணிகள் மேலும் எளிதாக பயணம் செய்யும் வகையில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயண திட்டத்தை அறிமுகம் செய்ய மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு மத்தியில் இதைச் செயல்படுத்துவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளன.