இந்திய குடும்பங்களில் இருப்பு உள்ளதாம் கஷ்டங்கள் இருக்கும் வீட்டில் கூட தங்கமானது வந்து சேர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

இதற்கு காரணம் தங்கத்தில் மீதுள்ள மோகம்தான். அதிலும் நம் வீட்டு இல்லதரசிகள் தங்கம் வாங்குவதை காய்கறிவாங்குவதை போல தங்க நகை வாங்க ஆர்வம் காட்டுவதால்தான். இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் பெரும்பாலான குடும்பத் தில் ஏராள அளவில் தங்க நகை இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகிறார்கள். இரண்டு ஆண்டு களுக்கு முன் இந்திய குடும்பங்கள் வைத்துள்ள தங்க ஆபரணங்கள் குறித்து உலக தங்கக் கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது. 

அதில்,“அப்போது இந்திய குடும்பங் களில் 23,000 முதல் 24,000 டன் தங்கம் உள்ளதாக மதிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த அளவு  தற்போதைய ஆய்வில் 24,000 முதல் 25,000 டன்னாக உயர்ந்திருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு இந்தியாவில் தங்கத்திற்கான தேவை 760 டன் னாக இருந்தது. இது இந்தாண்டு 750 முதல் 850 டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந் நியச் செலாவணிக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ள அதே வேளையில் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. 

இதனால் இந்தாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண் டில் தங்கத் தேவை 5% அதிகரித்து 159 டன்னாக உயர்ந்தது. அக்ஷய திருதியை, திரு மண நேரம் காரணமாக கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது” என கூறுகிறார்கள் பொருளாதார வல்லூனர்கள்.