திருமணம் ஆகாத விரக்தியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள  செட்டிகுளத்தில் மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.  அந்தோனி என்பவரின் மகள் கிறிஸ்டி,  26 வயது ஆகிறது.  இந்நிலையில் மகளுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர்.  கிறிஸ்டியை பெண் பார்க்க பலர் வந்து பார்த்துவிட்டுச் சென்றனர்.  ஆனால் கிருஸ்டியை  ஒருவரும்  திருமணம் செய்ய முன்வரவில்லை.  நீண்ட நாட்களாக பெண் பார்க்கும் படலம் நடந்து அதில் வரன் அமையாததால்  கிறிஸ்டி மன உளைச்சலுக்கு ஆளானார். 

இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்  கிருஸ்டியை கேலி பேசியதாக தெரிகிறது. உச்சகட்ட விரக்தியில் மனவேதனை அடைந்த கிருஸ்டி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  வெகு நேரமாகியும் கதவு  திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்ற பெற்றோர்கள் மகள்  தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  மகள் கிருஸ்டியை பார்த்து அவர்கள் கதறி அழுத காட்சி  காண்போரின்  நெஞ்சை உருக்குவதாக இருந்தது.  பின்னர்  ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து  அங்கு வந்த போலீசார்.

 

கிறிஸ்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இச்சம்பவம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.  மேலும் கிறிஸ்டி தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன என்பது குறித்து,  போலீசார் விசாரித்து வருகின்றனர்.  திருமணம் தள்ளிப் போனதால் இந்த முடிவை எடுத்தாரா.? அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரித்து வருகின்றனர் .