Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாட்டில் மறு உத்தரவு வரும் வரை எவற்றிற்கெல்லாம் தடை..? அரசு வெளியிட்ட முழு பட்டியல் இதோ...

தமிழ்நாட்டில் பொதுமுடக்கம் வரும் ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மறு உத்தரவு வரும்வரை தடை விதிக்கப்பட்ட செயல்பாடுகளின் முழு விவரத்தை பார்ப்போம். 
 

full list of restrictions continue till further announcement in tamil nadu
Author
Chennai, First Published Jun 29, 2020, 10:16 PM IST

தமிழ்நாட்டில் பொதுமுடக்கம் வரும் ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மறு உத்தரவு வரும்வரை தடை விதிக்கப்பட்ட செயல்பாடுகளின் முழு விவரத்தை பார்ப்போம். 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்று 3949 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 86224ஆக அதிகரித்துள்ளது. சென்னையிலிருந்து தமிழகம் முழுவதும் மற்ற ஊர்களுக்கு சென்றவர்களால், அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்துவருகிறது. 

கொரோனா பரவலை தடுக்க பொதுமுடக்கத்தின் அவசியம் இருப்பதால், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பாதிப்புக்கு ஏற்ப தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூன் 30 வரை அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு நாளையுடன் முடியவுள்ள நிலையில், புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. 

அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் அமலில் இருந்த முழு ஊரடங்கு வரும் ஜூலை 5ம் தேதி வரை நீடிக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜூலை 6ம் தேதியிலிருந்து 31ம் தேதி வரை, ஜூன் 24க்கு முன்பு இருந்த கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுகிறது.

ஜூலை 5, 12, 19, 26 ஆகிய நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜூலை 6ம் தேதி முதல் 31ம் தேதி வரை, ஜூன் 24ம் தேதிக்கு முன்பு இருந்த கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. 

full list of restrictions continue till further announcement in tamil nadu

ஆனால் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கு மறு உத்தரவு வரும் வரை தடை நீடிக்கும் அரசு தெரிவித்துள்ளது. அந்தவகையில், மறு உத்தரவு வரும் வரை தடை நீடிக்கும் செயல்பாடுகள் இதோ...

* நகர்ப்புற வழிபாட்டுத்தலங்களிலும், பெரிய வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு.
· 
*அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்

* நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
· 
* தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகள். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை, அரசு அலுவலர்கள், உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.

* பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்கப்படுத்தலாம்.
· 
* மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும். 

* வணிக வளாகங்கள்

* மெட்ரோ ரயில்/மின்சார ரயில்

*  திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (க்ஷயச), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள்.

* அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

* மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.

மேற்கண்டவற்றுக்கான தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios