கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் 10ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக உள்ளது. தினசரி பாதிப்பு 25 ஆயிரத்தை எட்டிவிட்டது. சென்னையில் பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் உள்ளன. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதேபோல அத்தியாவசிய கடைகள் தவிர்த்து பிற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


இதற்கிடையே புதிதாக மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு நேற்று பொறுப்பேற்றது. நேற்று மாலை மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனாவைக் கட்டுபடுத்த தீவிர நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் மே 10 முதல் 24 வரை இரண்டு வார காலத்துக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு இன்று உத்தரவிட்டது. இதன்படி தமிழகம் முழுவதும் முழு ஊரங்கு தீவிரமாக அமலாகிறது.