Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? சுகாதாரத்துறை செயலாளர் பரபரப்பு தகவல்..!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிகரிக்க தொடங்கி உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

full curfew be imposed in Tamil Nadu again? Health Secretary Radhakrishnan
Author
Chennai, First Published Apr 14, 2021, 1:42 PM IST

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிகரிக்க தொடங்கி உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  சுகாதாரத்துறை செயலாளர்;- தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிகரிக்க தொடங்கி உள்ளது. கொரோனா தொற்றை எதிர்கொள்ள போர்கால அடிப்படையில் தயாராகிக் கொண்டிருக்கிறோம். 

full curfew be imposed in Tamil Nadu again? Health Secretary Radhakrishnan

கொரோனா பரவலை குறைக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம். அதிகமான தொற்று ஏற்படும் இடங்களில் தனி கவனம் செலுத்தி வருகிறோம். அடுத்த 2 வாரங்கள் மிக மிக முக்கியம் என்பதால் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அடுத்த 2 வாரங்களுக்கு அனைவரும் மாஸ்க் அணிந்து விதிமுறைகளை பின்பற்றினால், பாதிப்பு குறையும். 

full curfew be imposed in Tamil Nadu again? Health Secretary Radhakrishnan

தடுப்பூசி போடுவதும் மிக முக்கியம் என்பதை மக்கள் உணர வேண்டும். தமிழகத்தில் வெண்டிலேட்டர்கள் தேவையான அளவு உள்ளது. மாஸ்க் போடாத 2.39 லட்சம் பேரிடம் 5.7 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு போடும் சூழ்நிலை தற்போது இல்லை. ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக் 91.6 சதவீதம் பாதுகாப்பானது என  சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios