சென்னையில் கடுமையாக இருக்கும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது தான் மெட்ரோ ரயில் திட்டம் . தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த மெட்ரோ ரயில் சேவை மூலம் பலனடைந்து வருகின்றனர் . இதில் ஒரு ரயில் நிறுத்தத்திற்கு 10 ரூபாய் சென்னையில் வசூலிக்க படுகிறது .

இந்த நிலையில் தான் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் பழுதாகி விடுகின்றன . இதனால் விரைவாக டிக்கெட் வழங்க முடிவதில்லை.

இன்று காலையும் டிக்கெட் வழங்கும் இயந்திரதத்தில் பழுது ஏற்பட்டுள்ளது . அதை சரி செய்ய சிறிது நேரம் எடுக்கும் என தெரிகிறது . இதனால் மெட்ரோ நிர்வாகம் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது . 

அதன்படி கோளாறு சரிசெய்ய படும் வரையில் பொது மக்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளது . இதனால் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர் .எனினும் எவ்வளவு நேரம் இலவச பயணம் நீடிக்கும் என்பதை பற்றி எந்த தகவலும் இல்லை .