Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - ஜெயக்குமார் திட்டவட்டம்

நாட்டைப் பிளவு படுத்தி பிரிவினையை ஏற்படுத்த நினைத்தால் அதிமுக வேடிக்கை பார்க்காது என்று குறிப்பிட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் என தெரிவித்துள்ளார்.

Former Minister Jayakumar has said that he will not allow the Citizenship Amendment Act in Tamil Nadu vel
Author
First Published Mar 12, 2024, 7:05 PM IST

தமிழகத்தில் அதிகரித்து வரும் கஞ்சா, குட்கா, புகையிலை, போதை பொருள் விற்பனையை தடுக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. அதன்படி சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ராயபுரம் லோட்டஸ் ராமசாமி சாலையில் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இதில் புகையிலை, கஞ்சா உள்ளிட்ட பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், 2013ல் குடியுரிமை திருத்த சட்டம்  கொண்டுவரப்பட்டது. அப்பொழுது யாரும் வாயை திறக்காமல் மூடிக் கொண்டு இருந்தார்கள். அடிப்படையிலே நீங்கள் தான் தப்பு செய்தீர்கள்.

15 ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை; தமிழக வெற்றி கழகத்தில் வெடித்த சர்ச்சை

பாஜக தேர்தல் பத்திரங்கள்  நாட்டில் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கோடிக்கணக்கான ரூபாய்கள் பாஜகவுக்கு யாரெல்லாம் கொடுத்தார்கள், திமுக உட்பட மற்ற கட்சிகளுக்கு எவ்வளவு பணம் கிடைத்தது என்பது வெளியில் வரப்போகிறது. இந்த விவகாரத்தில் எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

நாட்டாமை பட பாடல்.. பாஜக அலுவலகம் முன் டான்ஸ் ஆடும் சரத் மற்றும் குஷ்பூ - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அதை திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி உள்ளார்கள். பூர்வீக குடிமக்களாக இருக்கின்ற இஸ்லாமியர்களுக்கு முழுமையான பாதுகாப்பை அதிமுக என்றைக்குமே வழங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நாட்டைப் பிளவு படுத்தி பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்று பாஜக நினைத்தால் அதிமுக முழுமையாக எதிர்க்து போராடும். இஸ்லாமிய மக்களுக்கு, சிறுபான்மையினர் மக்களுக்கு என்றும் உறுதுணையாக அதிமுக இருக்கும். தமிழ்நாட்டில் சி ஏ ஏ, என் ஆர் சி சட்டங்களை அமல் படுத்த விடமாட்டோம் என்று தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios