பிரியா மரண வழக்கு! கைவிரித்த கோர்ட்! போன் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு டாக்டர்கள் தலைமறைவு.. பிடிக்க 3 தனிப்படை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால் முன்ஜாமீன் வழங்க முடியாது. வேண்டுமென்றால் மனுதாரர்கள் சரணடைந்து கொள்ளலாம் என்று கூறி வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். 

Football Player Priya Death case... Formation of 3 squads to capture doctors

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த வழக்கில் முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்டதை அடுத்து மருத்தவர்கள் தலைமறைவாகி உள்ளனர். இதனையடுத்து, அவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். 

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியா, கால் முட்டியில் ஏற்பட்ட ஜவ்வு கிழிவு காரணமாக கடந்த 28ம் தேதி பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு பிறகு பிரியாவின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து கடந்த 8ம் தேதி மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததார். 

இதையும் படிங்க;- எங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கு.. கதறிய மருத்துவர்கள்.. பிரியா வழக்கில் நீதிபதி வைத்த டுவிஸ்ட்..!

ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் அவரது கால் அகற்றப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி கடந்த 15ம் தேதி உயிரிழந்தார். பெரியார் நகர் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தவறான சிகிச்சை அளித்ததாக கூறி மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களான பால் ராம்சங்கர் மற்றும் சோமசுந்தர் மீது கவனக்குறைவால் மரணம் விளைவித்ததாக போலீசார் வழக்குப்பதிவு  செய்தனர். 

இந்நிலையில், மருத்துவர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஆகையால், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால் முன்ஜாமீன் வழங்க முடியாது. வேண்டுமென்றால் மனுதாரர்கள் சரணடைந்து கொள்ளலாம் என்று கூறி வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். இந்நிலையில், முன்ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து செல்போன்கள் சுவிட்ச் ஆஃப் செய்து விட்டு இரண்டு மருத்துவர்கள் தலைமறைவாகி உள்ளனர். இவர்களை பிடிக்க கொளத்தூர் தணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். 

இதையும் படிங்க;-  பிரியா மருத்துவ அறிக்கை வெளியீடு.. வெளியான பகீர் தகவல்.. கைதாகிறார்கள் மருத்துவர்கள்?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios