இதை முறையாக கடைபிடியுங்கள்... எத்தனை அலைகள் வந்தாலும் அசால்ட் பண்ணலாம்.. சுகாதார துறை செயலாளர்..!
மக்களுடைய ஒத்துழைப்பு மிக அவசியம். அடுத்த சில மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி ஆகியவற்றை தொடர்ந்து பின்பற்றினால் எத்தனை அலைகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ள முடியும். தற்போது தமிழகத்தில் முதியோர், முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
கொரோனாவை பொறுத்தவரை எந்த பக்கம் வேண்டுமானாலும் திரும்பும், எனவே பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருக்க கூடாது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்;- கொரோனாவை பொறுத்தவரை எந்த பக்கம் வேண்டுமானாலும் திரும்பும், எனவே பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருக்க கூடாது. இதில், மக்களுடைய ஒத்துழைப்பு மிக அவசியம். அடுத்த சில மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி ஆகியவற்றை தொடர்ந்து பின்பற்றினால் எத்தனை அலைகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ள முடியும். தற்போது தமிழகத்தில் முதியோர், முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தமிழகத்தில் 30 லட்சத்துக்கும் அதிகமான 18 வயதிற்கு மேற்பட்ட இளம் வயதினர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அதைப்போன்று 60 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 92 சதவீதம் பேர் இறப்பை சந்தித்து உள்ளனர். 3-வது அலை முதியவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
சென்னையை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களிலும் குறைந்து வருகிறது. கேரள எல்லை பகுதியில் கொரோனா தொற்று இன்னும் குறையாததால், அந்த பகுதி மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.