பிரதமர் மோடி வருகை எதிரொலி... சென்னையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு!!

வரும் ஏப்.8 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருவதையொட்டி ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

five layers police  security in chennai due to pm moodis visit

வரும் ஏப்.8 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருவதையொட்டி ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வரும் ஏப்.8 ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அதை தொடர்ந்து சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இதை அடுத்து சென்னையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குளத்தில் குளிக்கச் சென்ற தற்காப்பு கலை ஆசிரியர் நீரில் மூழ்கி பலி

இதற்காக 22,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், ஆளுநர் மளிகை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. மேலும் தங்கும் விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்களில் சோதனை நடத்தப்படுவதோடு கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மக்களை தூண்டிவிட்டே ஸ்டெர்லைட் ஆலையை மூடினர் - ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை பெருநகர கால் எல்லைக்குட்பட்ட இடங்களில் ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை வரும் பிரதமர் மோடி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், விவேகானந்தர் இல்லம் உள்ளிட்ட அவர் செல்லும் பகுதிகள் முழுவதும் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios