சென்னை சவுகார்பேட்டை மிண்ட் தெருவில் உள்ள வணிக வளாகத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை சவுகார்பேட்டையில் உள்ள வணிக வளாகம் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென எரிந்து அருகில் உள்ள துணிக்கடை மற்றும் நகைக்கடைகளில் தீ பரவியது.
சென்னை சவுகார்பேட்டை மிண்ட் தெருவில் உள்ள வணிக வளாகத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து ஒரு கட்டிடத்தில் இருந்து வணிக வளாகத்தில் இருந்த அடுத்தடுத்த கடைகளில் தீ மளமளவென பரவியது. உடனே இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க;- என்னவோரு வெறி! கணவனின் தலையில் கல்லை போட்ட மனைவி! ஆத்திரம் தீராததால் ஆணுறுப்பை அறுத்து என்ன செய்தார் தெரியுமா?

சம்பவ இடத்திற்கு விரைந்த வண்ணாரப்பேட்டைஇ எழுப்பூர் உள்ளிட்ட 6 தீயணைப்பு வாகனங்களில் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் விரைந்து 2 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பூக்கடை போலீசார் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க;- திமுக கவுன்சிலரின் 23 வயது மகளை இதற்காக தான் கொன்றேன்.. 17 வயது சிறுவன் கொடுத்த பகீர் வாக்குமூலம்..!

மொத்தம் உள்ள 11 கடைகளில் பல கடைகள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க;- மீண்டும் விபத்தில் சிக்கிய சென்னை புறநகர் மின்சார ரயில்...! காரணம் என்ன.?
