இந்து மதத்துக்கு எதிராக பேசி வன்முறையை துாண்டுகிறார் திமுக ஆதரவு பாதிரியார் எஸ்றா சற்குணம் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில், சென்னை கமிஷனர் அலுவலகத்தில், எஸ்றா சற்குணம் மீது புகார் அளிக்கப்பட்டது. இதில் கூறியிருப்பதாவது.

கிறிஸ்தவ பாதிரியார் எஸ்றா சற்குணம், திமுக ஆதரவாளர். இவர் இந்து மதம் ஒரு புனையப்பட்ட மதம். அப்படி ஒரு மதமே கிடையாது. இதையெல்லாம் இந்துக்களிடம் எடுத்துக் கூறுங்கள். அவர்கள் ஏற்காவிட்டால், அவர்கள் முகத்தில் இரண்டு குத்து குத்தி ரத்தம் வரும்படி செய்து விடுங்கள்.

அதன்பின் ஆண்டவனிடம் மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள் என வன்முறையை துாண்டும் வகையில் அவர் பேசிய வீடியோ பதிவு சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. எனவே அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். என கூறப்பட்டுள்ளது.