Asianet News TamilAsianet News Tamil

விவசாயிகளுக்கான சலுகை நீட்டிப்பு... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு..!

விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் பயன்பாட்டு கட்டணத் தொகை முழுவதையும் அரசே ஏற்கும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  அறிவித்துள்ளார்.

Extension of Concession for Farmers...edappadi palanisamy
Author
Tamil Nadu, First Published Apr 26, 2020, 11:39 AM IST

விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் பயன்பாட்டு கட்டணத் தொகை முழுவதையும் அரசே ஏற்கும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும்  ஊடரங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்திலும் இந்த ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் லாரி, வேன் உள்பட வாகன போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால்,  விவசாய பொருட்கள் விளைநிலங்களிலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விவசாய அமைப்புகள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை  வைத்தது. இதை தொடர்ந்து, விவசாயிகள் தங்களது விளைபொருட்களை குடோன்களில் வைக்க கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்றும்,  வியாபாரிகளுக்கான சந்தை கட்டணத்தை ரத்து செய்தும் தமிழக அரசு கடந்த மாதம் உத்தரவிட்டது.இதற்கிடையே, கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், வியாபாரிகளின் சந்தை  கட்டணம் ரத்து மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

Extension of Concession for Farmers...edappadi palanisamy

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பயன்பாட்டிற்காக நவீன சேமிப்பு கிடங்குகளில் விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள கிடங்கு வாடகை கட்டணத்தை மேலும் ஒரு மாதங்கள் செலுத்த தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. விளை பொருட்களை பாதுகாத்து சேமிக்க கிடங்கு வசதி - மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொருளீட்டு கடன் வசதியும் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

Extension of Concession for Farmers...edappadi palanisamy

காய்கறி, பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாக்கும் கட்டணம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் பயன்பாட்டு கட்டணத் தொகை முழுவதையும் அரசே ஏற்கும். பொருளீட்டு கடன் வசதியும் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் 1 சதவீத சந்தை கட்டண ரத்தும் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுகிறது என முதல்வர் அறிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios