இந்திய சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளநிலையில் , சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடி ஏற்றுகிறார் .

காலை 8 . 30  மணி அளவில் போர் நினைவுச் சின்னத்தில் வணக்கம்   செலுத்தும் முதல்வர் , அங்கிருந்து காவல்துறையினரின் மோட்டார் வாகன அணிவகுப்பு புடை சூழ கோட்டைக்கு வருகை தருவார் . அங்கு தென்னிந்திய  முப்படைகளின் அதிகாரிகளை தலைமை செயலாளர் சண்முகம் அறிமுகம் செய்து வைப்பார் . பின்னர் திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வர் . 

சரியாக 9 மணிக்கு கோட்டை கொத்தளத்திற்கு வரும் முதல்வர் ,தேசிய கொடி ஏற்றுகிறார் . அப்போது  பேண்டு வாத்தியங்கள் மூலம் தேசிய கீதம் இயற்றப்படும் .

அதனை தொடர்ந்து தமிழக மக்களுக்கு சுதந்திர தின உரையை முதல்வர் நிகழ்த்துவார். பின்னர் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும் ,  வீர சாகச செயல் புரிந்தவர்களுக்கும்  விருது வழங்கி கௌரவிப்பார் . தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் .