Asianet News TamilAsianet News Tamil

ஜெயலலிதா வழியை உடைத்தெறியும் எடப்பாடி - நீண்ட காலத்திற்கு பின் வெளிநாடுகளுக்கு பயணமாகும் தமிழகத்தின் முதல்வர் ஒருவர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த மாத இறுதியில் அரசுமுறை பயணமாக இங்கிலாந்து , அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பயணமாக இருக்கிறார் 

edapadi plans a foreign trip
Author
Tamil Nadu, First Published Aug 13, 2019, 1:15 PM IST

தமிழகத்தின் முதல்வராக அதிக நாட்கள் இருந்த கருணாநிதியும் சரி , ஜெயலலிதாவும் சரி இருவரும் ஆட்சியில் இருந்த போது வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து இருக்கிறார்கள் . கருணாநிதியாவது ஆரம்ப காலங்களில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார் .ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது அரசுமுறை பயணங்கள் மேற்கொண்டதே இல்லை . அந்த வகையில் எம்ஜிஆருக்கு பின் அதிமுகவின் சார்பில் முதல்வராக இருக்கும் ஒருவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி .

edapadi plans a foreign trip

கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் , உலகெங்கும் பரவி வாழும் தமிழ் மக்களின் உதவியுடன் தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிக்க " யாதும் ஊரே " என்கிற தனி சிறப்பு பிரிவு மற்றும் வலைதளம் உருவாக்க சுமார் 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று 110 விதியின் கீழ் அறிவித்தார் . இதன்கீழ் ஜப்பான் , சீனா, அமெரிக்கா ,தைவான்,ஜெர்மனி , இஸ்ரேல், பிரான்ஸ் ,தென்கொரியா ஆகிய  நாடுகளுக்கென முதலீட்டு தூதுவர்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது .

edapadi plans a foreign trip

இந்த நிலையில் தான் அமெரிக்கா , இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு இந்த மாத இறுதியில் 14 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்ள இருக்கிறார் முதல்வர் .

edapadi plans a foreign trip

நீண்ட காலத்திற்கு பின்னர் தமிழகத்தின் முதல்வர் ஒருவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது .

Follow Us:
Download App:
  • android
  • ios