படித்து முடித்தவர்கள், பகுதி நேரமாக வேலை தேடுபவர்கள், வீட்டில் இருப்பவர்கள் என  அனைவரும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம் எனக்கூறி சென்னை MMDA பகுதியில் செயல்பட்டு வந்த ட்ரான்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ( Trans india pvt ltd.) என்ற தனியார் நிறுவனத்தை நடத்தி வந்த பாண்டியன் (29), ராஜ்கமல் (26), ராஜா (24), ராஜ்குமார் (21) ஆகிய நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

வேலை தேடி வருபவர்களிடம் தலைக்கு ரூபாய் 7500 முதல் அதற்கு மேற்பட்ட தொகையை வசூல் செய்து இந்த நான்கு நபர்களும் லட்சக் கணக்கில் மோசடி செய்துள்ளனர். இந்த நிலையில் இவர்களால் ஏமாற்றப்பட்ட நபர்கள் அலுவலகம் சென்று இவர்களுடன் சண்டை போட்டுள்ளனர். 

தகவலறிந்த சூளைமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்து அந்த நான்கு பேரையும் கைது செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.