Asianet News TamilAsianet News Tamil

#BREAKING சென்னையில் நில நடுக்கம்.. பீதியால் பொதுமக்கள் சாலையில் தஞ்சம்..!

இந்த நில அதிர்வானது கடற்கரையை ஒட்டியுள்ள நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, கே.கே.நகர், அடையாறு, பெசன்ட் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 5.1ஆக நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Earthquake in Chennai
Author
Chennai, First Published Aug 24, 2021, 1:46 PM IST

ஆந்திராவில் காக்கிநாடாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சென்னையில் நுங்கம்பாக்கம், அம்பத்தூர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று மதியம் சரியாக 12.35 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. காக்கிநாடாவில் இருந்து 296 கிமீ தூரத்தில் சுமார் 10 கிமீ ஆழத்தில் இந்த நில நடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. ரிக்டர் அளவு கோலில் 5.1 ஆக இந்த நில அதிர்வு பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வானது சென்னையிலும் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது. 

Earthquake in Chennai

இந்த நில அதிர்வானது கடற்கரையை ஒட்டியுள்ள நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, கே.கே.நகர், அடையாறு, பெசன்ட் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 5.1ஆக நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னைவாசிகள் நில அதிர்ச்சி ஏற்பட்டிருப்பதாக தெரியவந்ததையடுத்து பொதுமக்கள் அச்சத்தால் வீட்டை விட்டு வெளியேறிய சாலையில் தஞ்சமடைந்தனர். இதனால், சென்னை முழுவதும் பரபரப்பான காணப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios