Asianet News TamilAsianet News Tamil

போலி இ-பாஸ் தயாரிப்பு.. தலைமை செயலக ஊழியர் உட்பட 5 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்..!

சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்துக் கொடுத்த தலைமைச் செயலக ஊழியர், சென்னை மாநகராட்சி ஊழியர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

duplicate e-pass issue...tamil nadu secretariat employees including 5 people arrest
Author
Chennai, First Published Jun 24, 2020, 3:41 PM IST

சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்துக் கொடுத்த தலைமைச் செயலக ஊழியர், சென்னை மாநகராட்சி ஊழியர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. ஆகையால், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டுமானால் இ-பாஸ் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் இ-பாஸ் முறை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையை விட்டு வெளியேற வேண்டுமானால் இ-பாஸ் இல்லாமல் வெளியே முடியாது. 

duplicate e-pass issue...tamil nadu secretariat employees including 5 people arrest

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக போலி இ-பாஸ் தயாரிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவுத்துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் இ-பாஸ்களை முறைகேடாக தயாரித்து பலருக்கும் விற்றிருப்பது தெரியவந்துள்ளது. அதில் ஒருவர் தலைமைச் செயலக ஊழியர் என்ற தகவலும் வெளியானது. 

duplicate e-pass issue...tamil nadu secretariat employees including 5 people arrest

இதனையடுத்து போலி இ-பாஸ் தயாரித்து வழங்கிய தலைமைச் செயலக ஊழியர், சென்னை மாநகராட்சி ஊழியர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்துள்ளனர். இந்த முறைகேட்டில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த போலி இ-பாஸ்  3000 முதல் 5000 வரை விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios