Asianet News TamilAsianet News Tamil

குடிமகன்களுக்கு அதிர்ச்சி... கொரோனாவால் டாஸ்மாக் பார்களை மூடக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்கும் விதமாக தியேட்டர்கள், டாஸ்மாக் கடைகள், ஷாப்பிங் மால்களை மூட உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
due to the spread of coronavirus tasmac bar theaters  to close case in high court
Author
Chennai, First Published Mar 30, 2021, 6:32 PM IST

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்கும் விதமாக தியேட்டர்கள், டாஸ்மாக் கடைகள், ஷாப்பிங் மால்களை மூட உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “2020 -ம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனாவின்  தாக்கம் தணிந்து வந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 21 -ம் தேதி நிலவரப்படி, 47 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

due to the spread of coronavirus tasmac bar theaters  to close case in high court

கடந்த பிப்ரவரிக்கு பின் தொற்று பரவல் 4.5 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் பல நகரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 5.81 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். மாவட்ட அளவில் நிலைமையை ஆராய்ந்து கட்டுப்பாடுகள் விதிக்க மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

due to the spread of coronavirus tasmac bar theaters  to close case in high court

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவாமல் தடுக்க, டாஸ்மாக் பார்கள், திரையரங்குகள், வழிபாட்டு தளங்கள், விளையாட்டு மைதானங்களை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எங்கே ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ என்ற பீதியில் மக்கள் உள்ளனர். இந்நிலையில் பரபரப்பைக் கிளப்பியுள்ள இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow Us:
Download App:
  • android
  • ios