மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், வீட்டின் கடிநீர் வரி ரூ.7.44 லட்சம் பாக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வரி ஏய்ப்பு ஏன்பது, நாட்டில் பல இடங்களில் நடந்து வருகிறது. இதில் சாதாரண மக்களின் வீடுகளில் குடிநீர், மின்சாரம், நில மதிப்பு உள்பட பல்வேறு வரிகள் கட்டாமல், இருந்து வருகின்றனர். இதையடுத்து அதிகாரிகள், தீவிர நடவடிக்கை எடுத்து, ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் . அப்போது, வரியுடன் சேர்ந்து, அபராதமும் விதித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் உயர் பதவியில் உள்ள அதிகாரிகளும், பல்வேறு வரி ஏய்ப்புகள் செய்யப்படுவதும், இதையொட்டி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்துவதும் தினமும் பல்வேறு நாளிதழ்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், மும்பை மாநகராட்சிக்கு வர வேண்டிய வரி பாக்கி தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் ஒருவர்  மனு செய்தார். அதற்கான தகவல் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதில், மகாராஷ்டிரா முதலமைச்சருக்கு சொந்தமான பூர்வீக வீடு மற்றும் மற்ற அரசியல் தலைவர்கள் ரூ.8 கோடி வரை வரி பாக்கி வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, முதல்வர் தேவேந்திர பட்னாவிசின் அதிகாரப்பூர்வ வீடான வர்ஷா பங்களாவுக்கு மட்டும், ரூ.7 லட்சத்து 44 ஆயிரத்து 981 தொகை, குடிநீர் வரி பாக்கியாக நிலுவையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், 18 18 அமைச்சர்களின் பெயர்களும், பட்டியலில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.