தமிழகத்தில் நாளை வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 24ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து, 5ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதிலும் பல தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து, மத்திய அரசு நாளையில் இருந்து வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளித்துள்ளது. இதனால் ஒவ்வொரு மாநிலங்களும் வழிபாட்டு தலங்களை திறக்க ஏற்பாடு செய்து வருகின்றன.

கேரளாவில் சபரிமலை திறக்கப்படும் என்றும், ஆந்திராவில் திருப்பதி கோவில் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து தலைமை செயலாளர் மதத்தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனால் கோவில்கள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா ருத்தரதாண்டவம் ஆடிவருகிறது. 

ஆனாலும், தமிழகத்தில் நாளை வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து முடிவு செய்யவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நோய் தொற்று குறையாத காரணத்தால் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.