Priya Rajan Property : சென்னை மேயர் பிரியா ராஜனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

சென்னை மாநகராட்சியின் மேயராக திமுகவைச் சேர்ந்த பிரியா ராஜன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பட்டதாரியான இவர் முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவத்தின் பேத்தி இவர். தாரா செரியன், காமாட்சி ஜெயராமன் ஆகியோரை அடுத்து சென்னையின் 3வது பெண் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இவர் வட சென்னையில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் மேயர், முதல் தலித் பெண் மேயர் என்பது குறிப்பித்தக்கது. 

Do you know the value of the property of Chennai Mayor Priya?

சென்னை மாநகராட்சியின் மேயராக திமுகவைச் சேர்ந்த பிரியா ராஜன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பிரியா ராஜானின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ன விவரம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சென்னையில் 178 வார்டுகளில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியலின பெண் மேயராக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற பரபரப்பு நிலவி வந்தது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக அமைச்சர் சேகர்பாபுவின் தீவிர ஆதரவாளரான பிரியா(28) சென்னை மேயர் வேட்பாளயராக அறிவிக்கப்பட்டார். 

Do you know the value of the property of Chennai Mayor Priya?

இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் மேயராக திமுகவைச் சேர்ந்த பிரியா ராஜன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பட்டதாரியான இவர் முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவத்தின் பேத்தி இவர். தாரா செரியன், காமாட்சி ஜெயராமன் ஆகியோரை அடுத்து சென்னையின் 3வது பெண் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இவர் வட சென்னையில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் மேயர், முதல் தலித் பெண் மேயர் என்பது குறிப்பித்தக்கது. 

இந்த சூழலில், பிரியா ராஜனின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ன விவரம் வெளியாகியுள்ளது. பிரியா ராஜனிடம் 8 லட்சத்து 24 ஆயிரத்து 941 ரூபாய் (ரூ.8,24,941) மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன. அசையா சொத்துகளோ, சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட சொத்துகளோ அவரிடம் இல்லை. இதன்படி சென்னை மேயர் வேட்பாளரிடம் மொத்தமாக  8 லட்சத்து 24 ஆயிரத்து 941 ரூபாய் (ரூ.8,24,941) சொத்து உள்ளது. 

Do you know the value of the property of Chennai Mayor Priya?

கணவர் ராஜாவிடம் ரூ.3,80,179 மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன. அசையா சொத்துகள் எதுவும் அவரிடம் இல்லை.  சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட சொத்தின் விலை மதிப்பு ரூ.67,500 ஆக உள்ளது. சுய சம்பாத்திய சொத்து மொத்த மதிப்பு ரூ.1,25,000 ஆக உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.5,05,179 ஆக உள்ளது. மாநகராட்சித் தேர்தல் வேட்பாளர் வேட்புமனுத் தாக்குதலின்போது உறுதிமொழி ஆவணத்தில் அவர் தாக்கல் செய்துள்ள விவரங்களின்படி, இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios