Asianet News TamilAsianet News Tamil

Chennai Police: டாக்டர் பரிந்துரையின்றி மாத்திரைகள் விற்றால் ஆப்பு தான்.. சென்னை காவல்துறை எச்சரிக்கை..!

போதை தரக்கூடிய மருந்துகள் மற்றும் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது. மேலும் அவற்றை உரிய மருந்துவர்களின் ஆலோசனை இல்லாமல் என்பதை அனைத்து மருந்து சுவரொட்டிகளை விற்பனை செய்ய இயலாத கடைகளிலும் எச்சரிக்கையுடன் கூடிய ஒட்டியிருக்க வேண்டும் என போலீசார் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. 

Do not sell pills without a doctor prescription... Chennai Police warning
Author
Chennai, First Published Nov 24, 2021, 12:39 PM IST

மருத்துவரின் பரிந்துரையில்லாமல் போதைக்கு பயன்படுத்தும் மருந்துகள், மாத்திரைகள் விற்பனை செய்யும் மருந்து கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது

மருந்துக்கடைகளில் போதைத்தரக் கூடிய மருந்து, மாத்திரைகளை சில இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் வாங்கி போதைக்காக பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது காவல் துறை கவனத்திற்கு தெரியவந்தது. இதனையடுத்து, போதை தரக்கூடிய மருந்து மாத்திரைகள் விற்பனை செய்வதை கட்டுப்படுத்த மருந்துக்கடை உரிமையாளர்களுடன் சென்னை காவல்துறை சார்பில் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.

Do not sell pills without a doctor prescription... Chennai Police warning

சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர்கள் கண்ணன் மற்றும் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், 200க்கும் மேற்பட்ட மருந்துக்கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். போதை தரக்கூடிய மருந்து மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்வது குறித்து சில கட்டுப்பாடுகள் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி போதை தரக்கூடிய மருந்துகள் மற்றும் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது. மேலும் அவற்றை உரிய மருந்துவர்களின் ஆலோசனை இல்லாமல் என்பதை அனைத்து மருந்து சுவரொட்டிகளை விற்பனை செய்ய இயலாத கடைகளிலும் எச்சரிக்கையுடன் கூடிய ஒட்டியிருக்க வேண்டும் என போலீசார் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. 

Do not sell pills without a doctor prescription... Chennai Police warning

மருந்துகள் விற்பனை செய்யும் விபரங்களை முறையான பதிவேட்டில் பதிந்து பராமரிக்க வேண்டும். அனைத்து மருந்து கடைகளிலும், சாலைகளை நோக்கியும், மருந்து கடைகளுக்குள்ளும் CCTV கேமராக்களை கண்டிப்பாக பொருத்த வேண்டும். போதை தரும் மருந்துகளை விற்கும் மருந்து கடையின் விவரங்களை காவல்துறைக்கு  பொதுமக்கள் தெரிவித்தால், தகவல் தெரிவிப்பவரை பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். போதை தரும் மருந்து மாத்திரைகளை யாருக்கும் மொத்தமாக வழங்கக்கூடாது. போதை தரும் மருந்து மற்றும் மாத்திரைகள் கேட்டு தொந்தரவு செய்து மிரட்டும் நபர்கள் பற்றி காவல் நிலையத்திற்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என மருந்து உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios