Asianet News TamilAsianet News Tamil

நாங்க மட்டும் என்ன குறைச்சலா..? உச்சநீதிமன்றத்திற்கு மு.க.ஸ்டாலின் அவசர வேண்டுகோள்..!

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் மொழியிலும் வெளியிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

DMK MK Stalin statement
Author
Tamil Nadu, First Published Jul 3, 2019, 1:05 PM IST

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் மொழியிலும் வெளியிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளின் விவரங்கள் ஆங்கில மொழியில் நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆங்கிலத்தோடு, இந்தி, அஸாமீ, கன்னடம், ஒடியா, தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தீர்ப்புகள் பதிவேற்றப்பட உள்ளது. இதன்மூலம் உலகிலேயே தீர்ப்பு விவரங்களை 5 மாநில மொழிகளிலும் வெளியிடும் முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த நடைமுறை இன்னும் ஒருவாரத்திற்குள் அமல்படுத்தப்பட உள்ளது. DMK MK Stalin statement

இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் மொழியிலும் வெளியிட வேண்டும் என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கள் மாநில மொழிகளில் மொழியாக்கம் என்பதை திமுக மகிழ்ச்சியோடு வரவேற்கிறது. அதேவேளையில், செம்மொழியான தமிழ்மொழி உச்சநீதிமன்றம் பட்டியலில் இல்லாதது வருத்தமளிக்கிறது. DMK MK Stalin statement

எனவே, உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கள் வெளிவரும் மொழிப்பட்டியலில் தமிழ் மொழியை அவசியம் சேர்க்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு திமுக சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios