திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 

கடந்த, 2006-ம் ஆண்டு ம.தி.மு.க.வை உடைக்க, முயற்சி செய்கிறார்' என, மறைந்த கருணாநிதிக்கு எதிராக, அப்போதைய பிரதமர், மன்மோகன் சிங்கிற்கு, வைகோ கடிதம் எழுதினார். இக்கடிதத்தின் அடிப்படையில், தி.மு.க. அரசு சார்பில் வைகோவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

 

 இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு பின்னர் சென்னையில் உள்ள, எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இருதரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில் ஆகஸ்ட் 26-ம் தேதி, தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் அன்றைய தினம் வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்ததால் அவரால் ஆஜராக முடியவில்லை. இதையடுத்து, திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த தீர்பை பொருத்தே வைகோவின் மாநிலங்களை எம்.பி. பதவிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்தது. 

இந்நிலையில், திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்ளவை எம்.பி.யுமான வைகோவை சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது.