தென்மாவட்ட மக்களுக்கு குட்நியூஸ்.. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில்
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் ரயில்களில் டிக்கெட் விரைவாக விற்றுத் தீர்ந்தது. தற்போது பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு செல்லவும் ஏராளமானோர் முண்டியடித்துக்கொண்டு முன்பதிவு செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக காரைக்குடி வழியாக தாம்பரம் - திருநெல்வேலி இடையே தீபாவளி சிறப்பு ரயில் சேவையை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் ரயில்களில் டிக்கெட் விரைவாக விற்றுத் தீர்ந்தது. தற்போது பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு செல்லவும் ஏராளமானோர் முண்டியடித்துக்கொண்டு முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரம் - திருநெல்வேலி ரயில் நிலையங்கள் இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
இதையும் படிங்க;- Diwali : தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? அப்படினா உங்க ஊருக்கு போகும் பஸ் எங்கு நிற்கும் தெரியுமா?
அதன்படி தாம்பரம் - திருநெல்வேலி பண்டிகைக் கால சிறப்பு ரயில் (06021) தாம்பரத்திலிருந்து அக்டோபா் 20ம் தேதி இரவு 9 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலியை வந்து சேரும். மறு மாா்க்கத்தில் திருநெல்வேலி - சென்னை எழும்பூா் பண்டிகைக் கால சிறப்பு ரயில் (06022) திருநெல்வேலியிலிருந்து அக்டோபா் 21ம் தேதி பிற்பகல் 1 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்து சேரும்.
இந்த ரயில்களில் ஒரு குளிா்சாதன முதல் வகுப்புப் பெட்டி, 2 குளிா்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிா்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், ஒரு மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டி ஆகியன இணைக்கப்படும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதையும் படிங்க;- விபத்தில்லா தீபாவளிக்கு இதெல்லாம் பின்பற்ற வேண்டும்... வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக காவல்துறை!!