இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தேசிய அளவில் கொரோனா பாதிப்பு 2000ஐ கடந்துவிட்ட நிலையில், 400க்கும் அதிகமான எண்ணிக்கையுடன் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தான் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் கேரளா இருந்தது. 

ஆனால் டெல்லி நிஜாமுதீனில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களை கண்டறிந்து பரிசோதித்த பின்னர், கேரளாவை பின்னுக்குத்தள்ளி தமிழ்நாடு, இரண்டாமிடம் பிடித்துவிட்டது. கேரளாவில் 286 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 309ஆக உயர்ந்துள்ளது. 

நேற்று ஒரே நாளில் 110 பேர் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியான நிலையில், இன்று 75 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. 

எனவே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 309ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 264 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 46 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையை பார்ப்போம்.

சென்னை - 46

ஈரோடு - 32

நெல்லை - 30

கோவை - 29

தேனி - 20

நாமக்கல் - 18

செங்கல்பட்டு - 18

திண்டுக்கல், கரூர் - 17

மதுரை - 15

திருப்பத்தூர், விருதுநகர் - 10

திருவாரூர் - 7

சேலம் - 6

ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, சிவகங்கை, தூத்துக்குடி - 5

விழுப்புரம், காஞ்சிபுரம் - 3

திருவண்ணாமலை, ராமநாதபுரம் - 2

திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர், திருப்பூர் - 1