தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இதுவரை 80 ஆயிரத்துக்கும் அதிகமான மாதிரிகள் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளன. 

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 7707 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் 66 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்த 66ல் 43 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மற்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு பெரியளவில் இல்லாத நிலையில், சென்னையில் மட்டும் பாதிப்பு தொடர்ந்து தாறுமாறாக அதிகரித்து கொண்டிருக்கிறது. 

தினமும் தமிழ்நாட்டில் கொரோனா உறுதியாகும் மொத்த எண்ணிக்கையில் 50%க்கும் அதிகமாக சென்னையில் மட்டுமே கொரோனா உறுதியாகிறது. இன்று 43 பேருக்கு சென்னையில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, சென்னையில் மொத்தம் 495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் அதிகபட்சமாக 141 பேரும் திருப்பூரில் 110 பேரும் திண்டுக்கல்லில் 80 பேரும் ஈரோட்டில் 70 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரியில் இன்னும் கொரோனா அண்டவில்லை. 

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:

அரியலூர் - 6

செங்கல்பட்டு - 58

சென்னை - 495

கோவை - 141

கடலூர் - 26

தர்மபுரி - 1

திண்டுக்கல் - 80

ஈரோடு - 70

கள்ளக்குறிச்சி - 5

காஞ்சிபுரம் - 19

கன்னியாகுமரி - 16

கரூர் - 42

கிருஷ்ணகிரி - 0

மதுரை - 60

நாகப்பட்டினம் - 44

நாமக்கல் - 55

நீலகிரி - 9

பெரம்பலூர் - 7

புதுக்கோட்டை - 1

ராமநாதபுரம் - 14

ராணிப்பேட்டை - 39

சேலம் - 30

சிவகங்கை - 12

தென்காசி - 38

தஞ்சாவூர் - 55

தேனி - 43

திருநெல்வேலி - 63

திருப்பத்தூர் - 18

திருப்பூர் - 110

திருவள்ளூர் - 52

திருவண்ணாமலை - 15

திருவாரூர் - 29

திருச்சி - 51

தூத்துக்குடி - 27

வேலூர் - 22

விழுப்புரம் - 43

விருதுநகர் - 25.