தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தினம் தினம் அதிகரித்துவருகிறது. நேற்று வரை 1075ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை, இன்று 1173ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

பரிசோதனை எண்ணிக்கையும் தமிழ்நாட்டில் கணிசமாக அதிகரித்துவருவதால் பாதிப்பு எண்ணிக்கை, தினமும் குறையாமல் அதே விகிதத்தில் அதிகரித்து கொண்டிருக்கிறது. பரிசோதனையை தமிழ்நாடு சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. பரிசோதனை மையங்களும் அதிகமாகியிருப்பதால்(34) நேற்று 1100 பரிசோதனைகளும் இன்று 2100 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் சென்னையில் அதிகபட்சமாக 208 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் திருப்பூரில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து ஈரோடு, திண்டுக்கல், நெல்லை ஆகிய மாவட்டங்களை பின்னுக்குத்தள்ளி திருப்பூர் மாவட்டம்((78) மூன்றாமிடத்தை பிடித்துள்ளது. கோவை மாவட்டத்தில் 126 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் கொரோனா தொற்று ஒருவருக்குக்கூட இல்லை.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

சென்னை - 208

கோவை - 126

திருப்பூர் - 78

ஈரோடு - 64

திண்டுக்கல், நெல்லை - 56

நாமக்கல், செங்கல்பட்டு - 45

திருச்சி - 43

தேனி - 41

கரூர் - 40

மதுரை - 39

ராணிப்பேட்டஒ - 38

திருவள்ளூர் - 33

நாகப்பட்டினம் - 29

தூத்துக்குடி - 26

விழுப்புரம் - 23

கடலூர் - 19

சேலம், விருதுநகர், திருப்பத்தூர் - 17

திருவாரூர், வேலூர் - 16

கன்னியாகுமரி - 15

திருவண்ணாமலை -  12

தஞ்சாவூர் - 11

சிவகங்கை - 10

நீலகிரி - 9

காஞ்சிபுரம் - 8

தென்காசி, ராமநாதபுரம் - 5

கள்ளக்குறிச்சி - 3

பெரம்பலூர், அரியலூர் - 1.