Asianet News TamilAsianet News Tamil

தாய்மாமன் வரிசை எடுக்க, உறவினர்கள் புடை சூழ ஆண் மகனுக்கு சடங்கு செய்த பெற்றோர் - வியந்து பார்த்த மக்கள்

ஆந்திரா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட தம்பதியர் தங்களது ஒரே மகனுக்கு மாமல்லபுரத்தில் வேட்டி அணியும் விழா நடத்தியதை அக்கம் பக்கத்தினர் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

dhoti Dressing ceremony was held for 10th class student in Mahabalipuram vel
Author
First Published Sep 27, 2023, 7:47 PM IST

ஆந்திரா மாநிலம், ஓங்கோல் மாவட்டத்தில் உள்ள தொட்டவரம் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.வெங்கடேஷ் - ஹரிப்பிரியா தம்பதியரின் ஒரே மகன் வி.வெங்கடவினய்(வயது15). இவர் செங்கல்பட்டில் உள்ள ஒரு பள்ளியில் சி.பி.எஸ்.இ. பாட பிரிவில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். எஸ்.வெங்கடேஷ் கடந்த 24 வருடங்களுக்கு முன்பு மாமல்லபுரம் வந்த அவர் அங்குள்ள கோவளம்  சாலையில் திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு பாத்திரங்கள், அலங்கார மேடை அமைக்கும் சப்ளையர்ஸ் கடை வைத்துள்ளார். 

தமிழகத்தில் எப்படி வயதுக்கு வந்த பெண்களுக்கு மஞ்சள் நீராட்டு விழா (பூப்பனித நீராட்டு விழா) நடத்துகிறார்களோ? அதேபோல் ஆந்திராவில் பெண்களை போல் 15 வயது, என பருவ வயதை கடந்த ஆண் பிள்ளைகளுக்கு அவர்களது பெற்றோர் தங்கள் முன்னோர்கள் கடைபிடித்த பாரம்பரிய கலாசாரத்தை பின்பற்றி வேட்டி அணியும் விழா நடத்துவார்கள். தமிழகத்தில் வேட்டி அணியும் விழா நடத்தும் கலாசாரம் கிடையாது. மாறாக திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு பட்டுவேட்டி, சட்டை அணிந்து அழகு பார்ப்பதுண்டு. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஆனால் ஆந்திராவில் இன்றும் பல மாவட்டங்களில் உள்ள கிராமங்கள், நகரங்களில் அந்த மண்ணின் கலாசாரம், பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் வேட்டி அணியும் திருவிழா நடத்தி வருகின்றனர். மாமல்லபுரத்தில் வெங்கடேஷ்-ஹரிப்பிரியா தம்பதியினர் பத்திரிகை அச்சடித்து, வாழை மரம், தோரணங்களுடன், பிரமாண்ட மேடை அமைத்து ஊரே வியந்து பார்க்கும் வகையில் தங்கள் ஒரே மகனுக்கு வேட்டி அணியும் திருவிழா நடத்தி அசத்தி உள்ளனர். 

பேசிக்கொண்டிருந்தபோது திடீரென வெடித்த செல்போன்; உடல் கருகி இளம் பெண் பலி

தாய்மாமன் சீர் வரிசையுடன், செண்டை மேளம் முழங்க,  பழங்கால காரில் விழா நடக்கும் அரங்குக்கு ஊர்வலமாக விழா நாயகன் அழைத்து வரப்பட்டார். விழா மேடையில் ஆந்திர மாநில பெண் நடன கலைஞர்கள் நடனமாடி விழா மேடைக்கு வெங்கட்வினய்-யை அழைத்து சென்றனர். பிறகு மேடையில் தாய் மாமன் பழம், பாக்கு சீர் வரிசை தட்டுடன் பட்டுவேட்டி - சட்டை வழங்கினார். பிறகு தனது தாய்மாமன் கொடுத்த பட்டு வேட்டி, சட்டை அணிந்து வந்து மேடையேறினார். 

சோதனை என்ற பெயரில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல சித்தரிக்கின்றனர் - ஜவாஹிருல்லா வேதனை

ஆந்திராவில் தங்கள் முன்னோர்களின் கலாசாரம், பண்பாட்டினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் தமிழக அளவில் மாமல்லபுரத்தில் முதன், முறையாக வெங்கடேஷ்-ஹரிப்பிரியா தம்பதியினர் வித்தியாசமான முறையில் அழைப்பிதழ் அடித்து தங்கள் ஒரே மகனுக்கு நடத்திய வேட்டி அணியும் விழா ஊரே வியந்து பார்க்கும் அளவில் ஆடம்பரமாக நடத்தி முடிக்கப்பட்டது. தமிழத்தில் வேட்டி அணியும் விழா பழக்கவழக்கத்தில் இல்லாவிட்டாலும் இங்கு வந்து நேரில் பார்த்தவர்கள் பெண் பிள்ளைகள் இல்லாதவர்கள் இதுபோல் தங்கள் மகனுக்கு வேட்டி அணியும் விழா நடத்தி மகிழலாம் என்றும் ஒருவருக்கொருவர் தங்கள் கருத்துக்களை பேசி பரிமாறிக் கொண்டனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios