அதெல்லாம் முடியவே முடியாது.. உதயநிதியிடம் ரூ.1.10 கோடி நஷ்டஈடு வழக்கை நிராகரிக்ககூடாது.. இபிஎஸ் பதில் மனு!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஆட்டு தாடியின் பின்னால் நீண்ட நாள் ஒளிஞ்சிருக்க முடியாது. அந்த ஆடே காணாமல் போகும்போது உங்கள் நிலைமை என்னாகும் என்பதை யோசித்துப் பாருங்கள் என்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்தை வெளியிட்டிருந்தார்.

Defamation case against Minister udhayanidhi Stalin.. should not be dismissed.. Edappadi Palanisamy files reply tvk

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்கை நிராகரிக்கக்கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், சானாதனத்திற்கான அர்த்தத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன் வீட்டில் உள்ள புத்தக அலமாரியில் இருக்கும் தேடிக்கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார். கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஆட்டு தாடியின் பின்னால் நீண்ட நாள் ஒளிஞ்சிருக்க முடியாது. அந்த ஆடே காணாமல் போகும்போது உங்கள் நிலைமை என்னாகும் என்பதை யோசித்துப் பாருங்கள் என்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்தை வெளியிட்டிருந்தார்.

இதையும் படிங்க: இந்தியா கூட்டணியில் இருந்து அதிமுகவிற்கு தாவிய கட்சி.. இபிஎஸ்யை சந்தித்து ஆலோசித்த தேசிய தலைவர்கள்

Defamation case against Minister udhayanidhi Stalin.. should not be dismissed.. Edappadi Palanisamy files reply tvk

இந்த அறிக்கையில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவதூறு பரப்பு வகையிலும், உதயநிதி பேசியிருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்  மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கு விசாரித்த நீதிமன்றம் அரசியல் தலைவர்கள் பரஸ்பரம் அறிக்கைகள் விடுவது வழக்கம் என்றாலும், இந்த வழக்கில் உள்ள ஆதாரங்களில் இருந்து உதயநிதி அறிக்கை அவதூறாக உள்ளது.  இதை அனுமதித்தால் மனுதாரருக்கு ஈடுகட்ட முடியாத இழப்பு ஏற்படும். ஆகையால் கொடநாடு பற்றி பேசவோ, அறிக்கைகள் வெளியிட கூடாது என உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். 

இதையும் படிங்க:  எங்க கூட்டணி கட்சி தலைவரே கொல்ல பாத்துட்டாங்களே! காக்கியை கையில் வைத்திருக்கும் முதல்வர் என்ன செய்கிறார்? EPS!

Defamation case against Minister udhayanidhi Stalin.. should not be dismissed.. Edappadi Palanisamy files reply tvk

இந்நிலையில், தனக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிராகரிப்பு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

Defamation case against Minister udhayanidhi Stalin.. should not be dismissed.. Edappadi Palanisamy files reply tvk

அதில், தன்னைப் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியதை ஒப்புக்கொண்டிருக்கிறார். எனவே அவர் பேசியது அவதூறு கருத்தா, இல்லையா என்பது விசாரணையில்தான் முடிவு செய்ய முடியும் என்பதால், உதயநிதிக்கு எதிராக தொடர்ந்த வழக்கை நிராகாரிக்கக் கூடாது என தெரிவிக்கக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வழக்கு விசாரணையை ஏப்ரல் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios