நடன அழகியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக, கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன், பினாய் கொடியேறியை கைதுசெய்ய மும்பை போலீசார் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளனர்.

பினாய் கொடியேறி, மும்பைக்கு சென்றபோது, அங்குள்ள ஒரு பாருக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த நடன அழகியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, நடன அழகியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

புகாரின்படி மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும், கேரளாவில் உள்ள பினாயியை கைது செய்ய பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளனர். இதற்கிடையில்,  அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 10 நாட்களாக பினாய் தலைமறைவாக உள்ளார்.

கடந்த வாரம் மும்பை போலீசார் பினாயை கைது செய்ய கேரளா வந்தபோது அவர் தப்பிவிட்டார். இதை தொடர்ந்து அவர் சார்பில் மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன்மனு மீது இன்று விசாரணைக்கு வருகிறது.