ஓட்டேரியில் காமவெறியில்  தன் சொந்த மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தை உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை ஓட்டேரி அடுத்த நம்மாழ்வார் பேட்டை பகுதியை சேர்ந்தவர்.  லோகநாதன் வயது (52) கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் இவருக்கு இரண்டு மகன் மற்றும் 19 வயதில் ஒரு பெண் உள்ளார். 

அந்தப் பெண் தந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மூத்த மகன் சதீஷ்குமார்  திருமணமாகி வில்லிவாக்கம் பகுதியில் உள்ளார்.   கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை லோகநாதன் முழு மது போதையுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது மகள் வீட்டில்  உறங்கிக் கொண்டிருந்தை பார்த்த அவர், பெற்ற மகள் என்றும் பாராமல் அந்தப் பெண்ணை பாலியியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அப்போது எதேச்சையாக  வீட்டிற்கு வந்த சதீஷ்குமார் அவரது தந்தையை அடித்து விரட்டிவிட்டு, அந்த பெண்ணை மீட்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.   இதையடுத்து சதீஷ்குமார் அயனாவரம் தலைமைச் செயலக காலனியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த தலைமை செயலக  அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை செய்தனர்.

அதில் லோகநாதன் தனது கூட்டாளிகளான,  ஐய்யாவு ,  மணி ,  உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து பல முறை அந்த பெண்ணை மது போதையில் பாலியியல் சீண்டலுக்கு உள்ளாக்கியுள்ளது தெரியவந்தது  இதில் அதிர்ச்சியடைந்த  போலீசர் மூவரையும் வலைவீசி தேடி வந்த நிலையில் ஓட்டேரி சுடுகாடு அருகே பதுங்கி இருந்த மூவரையும் கைது செய்து பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.