காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.

கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசினார். அப்போது, 'மோடிகள் எல்லாம் திருடர்கள்' என கூறினார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதைதொடர்ந்து, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த பிரமோத் குமார் என்பவர், ராஞ்சி கோர்ட்டில் ராகுலுக்கு எதிராக மனு தாக்கல் செய்தார்.

அதில், மோடி சமுதாயத்தினரை குறி வைத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார். இது ஆட்சேபனைக்குரியது. அவரது இந்த கருத்து, அந்த சமுதாய மக்களை காயப்படுத்தியுள்ளது.

இதற்காக ராகுல் காந்தி, ரூ.20 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. லும், ராகுல் பேசிய ஆடியோ நகலையும் இணைத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ராஞ்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் விபுல் குமார், வரும் ஜூலை 3ம் தேதி ராகுல் நேரடியாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ கோர்ட்டில் ஆஜராக வேண்டும் எனக்கூறி, அவருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.