தமிழக நிதியமைச்சருக்கு டஃப் கொடுக்கும் மேயர் பிரியா; பள்ளி மாணவர்களுக்கு சிறு தீனி
சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா இன்று வெளியிட்ட நிலையில், மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறு தீனி வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் 2023 - 24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா இன்று வெளியிட்டார். பல்வேறு முக்கிய அறிவிப்புகளுடன் வெளியாகியுள்ள நிதிநிலை அறிக்கையானது பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. அந்த வகையில், மாநகராட்சி பள்ளிகளில் 12ம் வகுப்பு தேர்வு பெற்று NEET, JEE, CLAT போன்ற போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் முதலாம் ஆண்டு கல்வி கட்டணத்தை மாநகராட்சி செலுத்தும்.
பள்ளிகளில் பொதுத்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகளுக்கு முன்னதாக மாலை நேர சிறு தீனி வழங்கப்படும். 12ம் வகுப்பு தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் 100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு வழங்கும் ஊக்கத் தொகையானது ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
புதுவையில் பாஜக முக்கிய பிரமுகர் வெடிகுண்டு வீசி படுகொலை; சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
சென்னை மாநகரில் சுற்றித் திரியும் நாய்களை பிடிப்பதற்கு 6 புதிய வாகனங்கள் ரூ.60 லட்சம் மதிப்பிட்டிலும், மாடுகளை பிடிப்பதற்கு 5 புதிய வாகனங்கள் ரூ.1.35 கோடி மதிப்பீட்டிலும் கொள்முதல் செய்யப்பட்டு உபயோகத்திற்கு கொண்டு வரப்படும்.
ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் நெகிழி மீதான தடை அமலாக்கத்தை தீவிரப்படுத்தும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி சோதனை அடிப்படையில் “மஞ்சப்பை” வழங்கும் திட்டம், சுயுஉதவி குழுக்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும். பொது மக்களின் வரவேற்று மற்றும் கருத்துகளின் அடிப்படையில் இத்திட்டம் மேலும் விரிவு படுத்தப்படும்.
சுற்றுலா வேன் மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார்; ஒருவர் பலி, 14 பேர் காயம்
மேலும் சென்னையில் மாதத்திற்கு ஒரு முறை ஏதேனும் ஒரு வட்டார அலுவலகத்தில் மனுக்களை நேரடியாக பெறும் வகையில் “மக்களைத் தேடி மேயர்” திட்டம் 2023 - 24ம் நிதியாண்டு முதல் செயல்படுத்தப்படும்.
கவுன்சிலர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி ஒரு லட்சத்தில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் மாநகராட்சி கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி 35 லட்சத்தில் இருந்து 40 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளதாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.