இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தீவிரம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 18,601 ஐ எட்டியிருக்கும் நிலையில் 590 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அசுர வேகமெடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,520 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் 17 பேர் தமிழ் நாட்டில் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் தலைநகர் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று வெளியான அறிவிப்பில் சென்னையில் மட்டும் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 303 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக வடசென்னையின் ராயபேட்டையில் 92 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திரு.வி.க நகரில் 39 பேருக்கும், தேனாம்பேட்டையில் 38 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 37 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 31  பேருக்கும், அண்ணா நகரில் 27 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர்.

உலகை அதிர வைத்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கவலைக்கிடம்..?

அதே போல திருவொற்றியூரில் 9 பேருக்கும், அடையார், பெருங்குடி பகுதியில் தலா 7 பேருக்கும், வளசரவாக்கம், ஆலந்தூரில் தலா 5 பேருக்கும், மாதவரத்தில் 3 பேருக்கும் மற்றும் சோழிங்க நல்லூரில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. மேற்கண்ட இடங்கள் அனைத்திலும் அரசு தீவிர கட்டுப்பாடுகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. சென்னையில் இருக்கும் 15 மண்டல பகுதிகளில் கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களாக மணலியும், அம்பத்தூரும் இருக்கிறது. எனினும் அங்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அசுர வேகத்தில் நடந்து வருகிறது.